1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2017 (11:35 IST)

பாகுபலி போல் முயற்சித்த நபர்; தூக்கி வீசிய யானை

பாகுபலி படத்தில் நாயகன் யானை மீது ஏறுவது போன்று கேராளாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏற முயற்சித்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 

 
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
 
பாகுபலி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் யானை மீது ஏறும் காட்சி இடம்பெற்றிருக்கும். 
 
கேராளாவைச் சேர்ந்த சாஜி(40) என்பவர் அதேபோல் யானை மீது ஏற முடிவு செய்துள்ளார். அதற்காக வாழைப்பழத்தைக் கொடுத்து அதன்மீது ஏற முயற்சித்தார். ஆனால் மிரண்டு போன யானை அவரை தூக்கி வீசியது. இதில் சாஜி பலத்த காயமடைந்தார்.