வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (18:37 IST)

பேஸ்புக்கில் லைவ் தற்கொலை: கண்டுரசித்த 2750 இரக்கமற்றவர்கள்!

ஆக்ராவை சேர்ந்தவர் முன்னா குமார் ராணுவத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பேஸ்புக்கில் லைவ்வாகப் பேசிய பின் தற்கொலை செய்து கொண்டார். 
 
முன்னா குமார் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளார். தொடர்ந்து ஐந்து முறை ராணுவத்தில் சேர நுழைவு தேர்வை எழுதி தோல்வியடைந்துள்ளார். 
 
இதனால் விரக்தியில் நேற்று, காலை தன்னுடைய பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்துகொள்ள போவதாக பேசி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
இதனை 2750 பேர் லைவ்வாகப் பார்த்துள்ளனர். ஆனால், ஒருவர் கூட அவருடைய தற்கொலையைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் நட்பு கொண்டு என்ன பயன் என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.