வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (08:45 IST)

ராகுல் காந்தியின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மம்தா, மாயாவதி மிஸ்ஸிங்?

மே 23ஆம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில் மே 19ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒன்றை கூட்ட திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்திற்கு மாயாவதி, மம்தா, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்பட பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.
 
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என கூறப்படுகிறது. மேலும் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்த மு.க,.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தேகமே என்றும், திமுக தரப்பில் வேறொருவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
தேர்தல் முடிவுக்கு பின்னர் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில்தான் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மம்தா, மாயாவதி திட்டமிட்டுள்ளனர். எனவேதான், மம்தா, மாயாவதி ஆகிய இருவரும் காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என கூறப்படுகிறது