செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (17:41 IST)

மைக் என நினைத்து டார்ச்சை பயன்படுத்திய மம்தா

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு மைக் என தவறுதலாக நினைத்து டார்ச்சை பயன்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பாதுகாப்பு காவலர் வைத்து இருந்த டார்ச் லைட்டை மைக் என நினைத்து வாங்கி பேசினார். உடனே சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் டார்ச் லைட்டை வாங்கிக்கொண்டு மைக்கை நீட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதனை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்து பதிவிட்டுள்ளனர். ஒலியை விட ஒளி வேகமாக செல்லும் என நினைத்து பேசினார் போலும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.