வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (12:32 IST)

நீதிபதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மம்தா! – 5 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

மேற்கு வங்கத்தில் தேர்தல் வெற்றி குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. எனினும் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார். எனினும் இந்த வெற்றியை எதிர்த்து மம்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கௌசிக் சந்தா விசாரித்த நிலையில் சந்தா பாஜக ஆதரவு நபர் என மம்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.