புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:15 IST)

வீட்டிலேயே போதைப் பொருள் விற்பனை –போலிஸிடம் சிக்கியப் பிரபல நடிகை!

மலையாளத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை அஸ்வதி பாபு வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஸ்வதி பாபு. அவரது நண்பர்கள் வட்டாரத்தில் இவர் வேறொரு விஷயத்திற்கும் பிரபலம், அது அவர் வீட்டில் நடத்தும் பார்ட்டிகள். அடிக்கடி நண்பர்களுடன் வீட்டில் பார்ட்டி வைத்துக் கொண்டாடும் வழக்கமுள்ளவர், அஸ்வதி.

இந்நிலையில் இவர் வீட்டில் வைத்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்வதாக கொச்சி போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் இவரை சில நாட்களாக போலிஸார் தங்கள் கண்காணிப்பு வட்டத்தில் கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் வாடகைக்குத் தங்கியுள்ள பலாச்சுவடு பகுதியில் டிடி கோல்டன் கேட் வீட்டில் சோதனை செய்த போது எம்.எம்.டி.ஏ எனப்படும் போதைபொருளை 58 கிராம் அளவுக்குக் கைப்பற்றியுள்ளது. போதைப்பொருள் விற்பனை செய்ததை ஒத்துக்கொண்ட அஸ்வதி இந்த விற்பனைக்கு தனது டிரைவர் பினோய் ஆபிரஹாம் உதவினார் என்றும் கூறியுள்ளார்.

போதைப்பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்ததாகவும் ஒத்துக்கொண்டுள்ளார். போலிஸார் அஸ்வதியையும் அவரது டிரைவர் பினோயையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.