Daily Horoscope
✕

மலபார் எக்ஸ்பிரசில் திடீர் தீ… சங்கிலியை இழுத்த பயணிகள்! – கேரளாவில் பரபரப்பு!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 17 ஜனவரி 2021 (09:41 IST)
கேரளாவில் இயக்கப்பட்டு வந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் வர்கலா அருகே தீடீரென தீப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலின் சரக்குப்பெட்டியிலிருந்து தீ வெளியேறுவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றபட்ட நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்தும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எல்லாம் காட்டு

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..

ரிலையன்ஸ் ஜியோ IPO அக்டோபர் 21ம் தேதி துவக்கம்!....

அரசு ஊழியர்களுக்கு பர்சனல் லோன்.. ரூ.35 லட்சம் வரை கிடைக்குமா?

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

காமராஜர் பிறந்த நாளில் அனைத்து கோவில்களிலும் அன்னதானம்: தமிழக அரசின் அரசாணை...

அடுத்த கட்டுரையில்
Show comments