வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 31 மே 2017 (15:27 IST)

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் நீதிமன்றம்

பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


 


 
இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா, வங்க தேசம் ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. கேராள மாநில முதல்வர் இந்த தடைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
நேற்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.