வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (18:52 IST)

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவு

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் தற்போது இறுதிக் கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வரும் நிலையில் இந்த கூட்டணி மொத்தம் 198 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 86 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக கூட்டணி 83 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி பார்த்தால் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவருகிறது 
 
இருப்பினும் இந்த கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமா? என்பதை வரும் 24ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது