1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2022 (08:44 IST)

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சிறப்பு சட்டப்பேரவை!

மகாராஷ்டிரா மாநிலத்தின் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

 
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது ஆதரவாளர்களை வைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தார். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். 
 
இதனைத்தொடர்ந்து மராட்டிய மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 
 
மகாராஷ்டிர முதல்வர் பதவியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பறித்த மூன்றே நாட்களில், ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார். 
 
இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்வாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.