செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 மே 2025 (11:32 IST)

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!
மஹாராஷ்டிரா அரசு புதிய வாகன பதிவு விதிமுறையில் முக்கிய மாற்றம் செய்துள்ளது. அந்த வகையில் வாகன நிறுத்த இடத்திற்கு சான்றிதழ் இல்லையெனில், எந்த புதிய கார்களும்  பதிவு செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மஹாராஷ்டிரா மாநிலத்தில், குறிப்பாக மும்பை பெருநகர பகுதியில் வாகன நிறுத்தத்துக்கான இடங்கள் பெரிதும் குறைவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்துக் குறைகளை சமாளிக்க அரசு புதிய ஒருங்கிணைந்த வாகன நிறுத்த கொள்கையை உருவாக்கி செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
 
இந்த கொள்கையின் அடிப்படையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சரின் ஆலோசனை அமர்வுகள் நடைபெற்றுள்ளன. அந்தக் கூட்டத்தில், வாகன நிறுத்த இடங்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும், புதிய பிளாட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்த வசதியுடன் மட்டுமே வழங்க அரசு கட்டாயப்படுத்தும் என்றும் அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார்.
 
இதனுடன், வாகனத்தை வாங்கும் நபர்கள், வாகன நிறுத்த இட ஒதுக்கீட்டு சான்றிதழை அரசு துறையிடமிருந்து பெற வேண்டும். இதை விலக்கி ஏதேனும் புதிய வாகனம் பதிவு செய்யப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த புதிய கட்டுப்பாடு, மஹாராஷ்டிராவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது.
 
Edited by Mahendran