1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (12:28 IST)

இரவில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த ஆண்டின் கடைசி இதுவே!!

2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெறவுள்ளது. 
 
சூரியன் மற்றும் பூமிக்கு இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலா வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று இந்த ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. 
 
இந்திய நேரப்படி இரவு 7.03 மணிக்கு தொடங்கி நாளை நள்ளிரவு வரை நீடிக்கும் இந்த  சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இந்தியாவில் இதனை பார்க்க முடியாது. ஆனால், சிலி, அர்ஜென்டைனா நாடுகளில் பகல் நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் அங்கு பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.