புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 அக்டோபர் 2018 (13:58 IST)

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா: முதல்வரின் கண்ணீருக்கு ஆறுதல்!

கர்நாடக முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமி பெரும் போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து பதவியேற்றார். 
 
இந்நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் குமாராசாமி. இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசியது பின்வருமாறு, 
 
நான் கடவுள் அருளால் முதல் மந்திரி ஆகி இருக்கிறேன். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக சிலர் எனது நிர்வாகம் மீது பழி சுமத்தி பிரசாரம் செய்து வருகிறார்கள். 
 
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதுபோல பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வரும் நிலையில் வீணான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது என கூறி தன்னிலையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். 
 
மேலும், எனது கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்காக உழைப்பேன் என்றும் உறுதி அளித்தார். இதுபோல் ஏற்கனவே ஒரு முறை விமர்சனக்களுக்காக குமாரசாமி கண்ணீர் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.