திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 29 மே 2017 (14:55 IST)

பெல்ட்டுக்கு பதிலா பாவடை நாடாவை கட்டிக்கோங்க: பாஜகவை விளாசும் குஷ்பு!

பெல்ட்டுக்கு பதிலா பாவடை நாடாவை கட்டிக்கோங்க: பாஜகவை விளாசும் குஷ்பு!

மத்திய அரசு சமீபத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொல்லக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜக மீது சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் விவசாய பணிகளுக்கு மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்கலாம். மற்றபடி எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த கூடாது. மேலும் மத நம்பிக்கைகளுக்காகவும் மாடுகளை பயன்படுத்த கூடாது என கூறியிருந்தது.
 
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கடும் எதிர்ப்புகள் நிலவுகிறது. டுவிட்டரில் மத்திய அரசுக்கு எதிராக திராவிட நாடு என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை ட்ரெண்டிங் ஆக்கி விட்டனர் மலையாளிகள். அதே போல கர்நாடகா மற்றும் புதுவையிலும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
 
இந்நிலையில் மட்டிறைச்சி தடைக்கான மத்திய அரசின் இந்த முடிவை விமர்சித்து கருத்து கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு. அதில், மக்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை அரசு சொல்லக் கூடாது. என்னுடைய தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
 
இதைத்தான் உடுத்த வேண்டும், இதைத் தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதால் அதையும் தடை செய்தால் பாஜகவினர் யாரும் உண்ணாமல் இருக்க முடியுமா? தோல் செருப்புகள் அணியாமல் வெறும் காலில் நடக்க முடியுமா? பேண்டு பெல்ட்டுக்கு பதில் நாடாவை கட்டிக் கொள்ள முடியுமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி பாஜகவை விளாசினார் குஷ்பு.