போட்டோஷூட் என அழைத்து பாலியல் பலாத்காரம்! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரளாவில் போட்டோஷீட் என மாடல் அழகி ஒருவரை அழைத்து 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாவட்டம் மலப்புரத்தை சேர்ந்தவர் 27 வயதான மாடல் அழகி. கணவரை பிரிந்து வாழும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கொச்சியை சேர்ந்த சலீம் குமார் என்பவர் மாடல் அழகியை போட்டோஷூட் ஒன்றிற்காக அழைத்துள்ளார்.
மாடல் பெண்ணும் கொச்சின் செல்ல அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் அவரை தங்க வைத்த சலீம் குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருடன் அவரது நண்பர்கள் இருவரும் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக இவ்வாறு தொடர்ந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்து தப்பிய மாடல் பெண் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சலீம் குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் உடந்தையாக இருந்த ஓட்டல் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.