புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (18:00 IST)

கேரளாவில் இன்று தான் கொரோனா உச்சம்: ஒரே நாளில் 37,790 பேர் பாதிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது 
 
இந்தியா மொத்தம் சுமார் மூன்றரை லட்சம் மக்கள் ஒவ்வொரு நாளும்கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது 
 
இந்த நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,790என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் கேரளாவில் இன்று மட்டும் 57 பேர் பலியாகி உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது/ மேலும் இன்று ஒரே நாளில் கேரளாவில் 1,42,588 பேர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பினராயி விஜயன் அவர்கள் மீண்டும் முதல்வராக பதவியேற்றதும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்பட்டு வருகிறது