ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 26 ஜூன் 2016 (14:06 IST)

எம்எல்ஏ-வை காணவில்லை - காவல் நிலையத்தில் புகார்

எம்எல்ஏ-வை காணவில்லை - காவல் நிலையத்தில் புகார்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவை காணவில்லை என்று காங்கிரஸ் கட்சி கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்து  ரசீது கொடுதுள்ளனர்.
 

 
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொல்லம் தொகுதியில் நடிகர் முகேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இந்த நிலையில், அவரை காணவில்லையென, கொல்லம் காவல் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் புகார் அளித்தனர்.
 
அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை, அதற்கான ரசீதை வழங்கியது. இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.