1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (19:43 IST)

கேரளாவில் இன்று ஒரே நாளில் 37,199 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று ஒரே நாளில் 37,199 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் 17,500 பேர் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் குணமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,61,801 ஆகும் 
 
தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளாவில் தமிழகத்தை விட இருமடங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது 
 
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் புதிய அரசு பதவியேற்றவுடன் பல்வேறு புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது