வேட்டியை உருவிய யானை! தப்பி ஓடிய பாகன்! – வைரலாகும் வீடியோ!
கேரளாவில் தம்பதியர் ஒருவர் திருமண வீடியோ எடுத்தபோது யானை ஒன்று பாகனை தலைகீழாக தூக்கி வேட்டியை உருவிய வீடியோ வைரலாகியுள்ளது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் சமீபத்தில் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அப்பகுதியின் பல்வேறு பகுதியில் அவர்களை ஜோடியாக வைத்து கேமராமேன் வீடியோ எடுத்துள்ளார்.
அப்படியாக கோவில் யானை முன்பும் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அப்செட் ஆன யானை தனது அருகில் வந்த பாகனை தும்பிக்கையால் தாக்கி கீழே தள்ளியது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் யானைக்கும் மதம் பிடித்துவிட்டதாக அஞ்சி அலறி ஓடியுள்ளனர்.
கீழே விழுந்த பாகனை தலைகீழாக தூக்க யானை முயன்றது. அந்த முயற்சியில் அதன் தும்பிக்கையில் பாகனின் வேட்டி அகப்பட அதை உறுவியது. உடனே அவர் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். யானை மேல் இருந்த பாகன் அதை தட்டிக் கொடுக்கவும் அது பின்னர் சாந்தமடைந்துள்ளது.
இதை திருமண தம்பதிகளை வீடியோ எடுத்த கேமராமேன் வீடியோ எடுத்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த தம்பதியர், தாங்கள் எந்த யானையையும் வீடியோ எடுப்பதற்காக வாடகைக்கு அமர்த்தவில்லை என்றும், அங்கு இயல்பாக இருந்த பகுதியில் தற்செயலாக அந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இதை எதிர்மறையான கோணத்தில் கருத வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Edit By Prasanth.K