1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (17:49 IST)

கதறி அழுத காவ்யா மாதவன்: ஆறு மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை!

கதறி அழுத காவ்யா மாதவன்: ஆறு மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை!

பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கதறி அழுததாக தகவல்கள் வருகின்றன.


 
 
கடந்த 10-ஆம் தேதி நடிகை கடத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், அந்த நடிகையின் வீடியோ அடங்கிய மெமரி கார்டை திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனின் துணிக்ககடையில் கொடுத்ததாக கூறியிருந்தார்.
 
இதனையடுத்து நேற்று முன்தினம் நடிகை காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினார்கள். ஆறு மணி நேரம் நடந்த இந்த கிடுக்குப்பிடி விசாரணையின் போது காவ்யா மாதவன் கதறி அழுததாக காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.