இரண்டாக பிளந்த பூமி!!: காஷ்மீரில் இயற்கையின் கோர தாண்டவம்!
பாகிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் பகுதிகளில் கடுமையான நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு நிலப்பகுதி இரண்டாக பிளந்து கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு அருகே உள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதி மற்றும் பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள ஆசாத் பாகிஸ்தான் பகுதிகளில் சற்றுமுன் 6.1 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரையிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஓடினர்.
எல்லைப்பகுதிகளில் சாலைகள் இரண்டாக பிளந்ததால் வாகனங்கள் பள்ளங்களுக்குள் சென்று விழுந்தன. ஆசாத் காஷ்மீர் மிர்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய பள்ளங்கள் உண்டாகியுள்ளன. குழந்தைகள், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இதனால் நிலச்சரிவுகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலநடுக்க பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.