1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2022 (08:04 IST)

மதராசாவுக்குள் புகுந்த மர்ம கும்பல்: கர்நாடக தசரா விழாவில் பரபரப்பு

madarasa
மதராசாவுக்குள் புகுந்த மர்ம கும்பல்: கர்நாடக தசரா விழாவில் பரபரப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள மதராசாவில் மர்ம நபர்கள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தசரா கொண்டாட்டம் தற்போது நாடு முழுவதும் நடந்து வந்த நிலையில் இந்த கொண்டாட்டம் பெரும்பாலான இடங்களில் எந்தவித பிரச்சனையுமின்றி நடந்தது.
 
ஆனால் கர்நாடக மாநிலத்தில் தசரா விழாவின் போது 500 ஆண்டுகள் பழமையான மதராசாவுக்குள் மர்மந் நபர்கள் புகுந்து அங்கு ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் பூஜை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது
 
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நிலையில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva