1.5 லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடகா! ஒகேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவிலும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் கர்நாடகாவின் கே.எஸ்.ஆர் அணை, கபினி அணை உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
தமிழகத்திற்கு ஒரு கன அடி தண்ணீர்கூட தர முடியாது என பிடிவாதம் பிடித்த கர்நாடக அரசு தற்போது உபரிநீரை எக்கச்சக்கமாக திறந்து விட்டுள்ளது. கே.எஸ்.ஆர், கபினி அணைகளிலிருந்து 1.5 லட்சம் கன அடி உபரிநீர் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இதனால் ஒகேனக்கலில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து 11வது நாளாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K