1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (22:47 IST)

பெட்ரோல், டீசலை போலவே மெல்ல மெல்ல ஏறும் சிலிண்டர்

பெட்ரோல், டீசலின் விலை கடந்த நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வரும் மத்திய அரசு, அதே நடைமுறையை சிலிண்டர்  விஷயத்திலும் செய்து வருகிறது.



 
 
ஏற்கனவே கடந்த 10 மாதங்களில் சிலிண்டரின் விலை மாதம் ஒன்றுக்கு ரூ.2 எனரூ.20 அதிகரித்துள்ள நிலையில் தற்போது இன்று முதல் மேலும் ரூ.1.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமின்றி வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர்  சமையல் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படும் எனவும், இதனால் விலை மாதத்திற்கு 4 ரூபாய் அதிகரிக்கும் எனவும் ஏற்கனவே அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சமையல் சிலிண்டர் போலவே ஜெட் எரிவாயுவிற்கான விலை கிலோ லிட்டருக்கு 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கிலோ லிட்டருக்கு 50,020க்கு விற்கப்பட்ட ஜெட் எரிவாயு இனி ரூ.53,045க்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.