1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:09 IST)

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது: தேசிய ஊடகங்களை சாடிய கிரிக்கெட் வீரர் ஜடேஜா!

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது: தேசிய ஊடகங்களை சாடிய கிரிக்கெட் வீரர் ஜடேஜா!

தமிழகத்தில் அலங்காநல்லூரில் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இரவு முழுவதும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. ஆனால் இதனை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.


 
 
ஜல்லிகட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு போலீஸார் தடை விதித்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று காலை 9 மணி முதல் இன்று காலை வரை சுமார் 21 மணி நேரமாக இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

 
மிகவும் கவனத்தை ஈர்த்த இந்த போராட்டத்தை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா டுவிட்டரில் கண்டித்துள்ளார். இந்திய ஊடகங்களே தமிழ்நாடும் இந்தியாவிற்குள் தான் இருக்கிறது, உங்கள் பார்வையை தமிழ்நாட்டின் பக்கமும் திருப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.