அடுத்த நிதியமைச்சர் சுப்பிரமணியன் சாமி: திக் விஜய் சிங் குட்டு
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் இன்டெலெக்சுவல் பிராப்பர்ட்டி ரைட்ஸ் எனப்படும் அறிவுசார் சொத்து உரிமை விவகாரத்தில் அரவிந்த சுப்ரமணியன் அரசுக்கு எதிராகத்தான் இருக்கிறார் என குற்றம் சாட்டினார்.
மேலும் தனது இன்னொரு பதிவில், 13-03-13 அன்று அமெரிக்காவில் யு.எஸ். காங்கிரஸ் சபையில், மருந்துப் பொருள் உற்பத்தித் துறையை பாதுகாக்க அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்று பேசியது யார்? எனவும், ஜி.எஸ்.டி. மசோதாவை காங்கிரஸ் எதிர்ப்பதை அரவிந்த் சுப்ரமணியன் ஆதரிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் சுப்பிரமணியன் சாமி.
இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், சுப்பிரமணிய சுவாமியின் உண்மையான இலக்கு அருண்ஜெட்லிதான், அரவிந்த் சுப்ரமணியன் கிடையாது. என்றார்.
மேலும், நிதித்துறை பதவியை சுப்பிரமணியன் சுவாமி கைப்பற்றவே இதுபோன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்து வருகின்றார். சுப்பிரமணியன் சுவாமியை பாஜக நிதியமைச்சராக்கப் போகிறதா? என கேட்டுள்ளார் திக் விஜய் சிங்.