வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (08:22 IST)

இந்திய ராணுவ வீர்ர் கடத்தப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்

சமீபத்தில் இந்திய வான்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய நிலையில் இந்திய அரசின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காஷ்மீரை சேர்ந்த ராணுவ வீரர் முகமது யாசின்  தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக ஒருசில ஊடகங்களில் அதிர்ச்சி செய்தி வெளிவந்தது
 
ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசு காஷ்மீரில் ராணுவ வீரர் முகமது யாசின் தீவிரவாதிகளால் கடத்தப்படவில்லை என்றும், ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்றும் அறிவித்துள்ளது. இதனை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
 
முன்னதாக காஷ்மீர் மாநில பட்காம் என்ற பகுதியில் ராணுவ வீரர் முகமது யாசினை வீடு புகுந்து நேற்று  தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய அரசின் இந்த விளக்கத்தை அளித்து கடந்த சில மணி நேரங்களாக பரவிய வதந்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.