செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:28 IST)

நிா்மலா சீதாராமன் மீதான தோ்தல் பத்திர வழக்கு: விசாரிக்க இடைக்காலத் தடை

Nirmala Sitharaman
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் பத்திர வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் ஆகியோர் மீது தேர்தல் பத்திர வழக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது செப்டம்பர் 28ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் நவீன் குமார் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


Edited by Siva