புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2017 (20:52 IST)

நடுவானில் தீ பிடித்த இண்டிகோ விமானம்!!

திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற இண்டிகோ விமானத்தில் தீப்பிடித்து, பின்னர் அணைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.


 
 
கடந்த சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் சென்றுள்ளது. அப்போது திடீரென கறுப்பு நிற பேக்கில் இருந்து புகை வந்துள்ளது. 
 
இதை கண்ட விமான ஊழியர் ஒருவர் அந்த பேக் மீது தீயணைப்பு கருவியால் ஸ்பிரே செய்துள்ளனர். பின்னர் அந்த பேக்கில் இருந்த லேப்டாப்பில் தான் தீ ஏற்பட்டிருக்கிரது என்பது தெரியவந்துள்ளது.
 
அந்த லேப்டாப்பை தண்ணீர் நிறைந்த ஒரு கன்டெய்னரில் வைத்து, பயணிகளை வேறு இடத்திற்கு மாற்றி அமர வைத்தனர். எந்த ஆபத்துமின்றி பத்திரமாக பயணிகள் பெங்களூர் வந்து சேர்ந்தனர்.