புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (15:12 IST)

ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் பலி! – மக்கள் அதிர்ச்சி!

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.

போரை நிறுத்தும் நோக்கில் நேற்று பெலாரஸில் நடந்த உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் ரஷ்யா, உக்ரைனின் பகுதிகளில் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இன்று கார்க்கிவ் பகுதியில் காலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியாகியுள்ளார். அவர் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.