வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (19:32 IST)

2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: அதிர்ச்சி தகவல்

2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: அதிர்ச்சி தகவல்
2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் அவ்வப்போது போதைப் பொருள் கடத்தல் பறிமுதல் செய்யப்படும் என்பதும் தெரிந்ததே. ஆனால் ஒரே நேரத்தில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றி உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது
 
பல்வேறு முகமைகளுடன் இணைந்து கடற்பரப்பில் படகுகளில் நடத்திய சோதனையில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது 
 
இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் நடத்திய சோதனைகளில் இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இவற்றின் சந்தை மதிப்பு 2,000 கோடி என்றும் தெரிவித்துள்ளது
 
கடற்கரை பகுதியில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது