சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய கடற்படை வீரருக்கு சிறை!!
பேஸ்புக் மூலமாக இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த இந்திய கடற்படை வீரருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திலிப் குமார் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஷிகாரா என்ற கப்பலில் பணியாற்றி வருகிறார். திலிப் குமார் மீது அந்த சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளார்.
முதலில் பேஸ்புக்கில் சகஜமாக பேசி வந்த திலிப் குமார், பின்னர் அந்த பெண்ணிடம் வரம்பு மீறி பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் கோபமடைந்த திலிப் குமார், அந்த பெண்ணை அவதூறாக பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தை சி.ஐ.டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.