1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (08:36 IST)

இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’ என்று அறிவிக்காவிட்டால் ஜலசமாதி: சாமியார் அறிவிப்பு

இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’ என்று அறிவிக்காவிட்டால் ஜலசமாதி:
இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடையப் போவதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சுதந்திரத்திற்கு முன்பு முதல் இந்தியா என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்பதால் இந்து ராஷ்டிரா என்று அழைக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஒரு சில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மத்திய அரசு இது குறித்து பரிசீலனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காந்தி ஜெயந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்க வில்லை என்றால் நான் ஜலசமாதி அடைவேன் என்று உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அயோத்தியில் வாழ்ந்து வரும் சாமியார் ஆச்சாரியா மகாராஜ் என்பவர் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது