1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 மே 2020 (15:46 IST)

இந்தியாவில் இனி வெப்பநிலை குறையும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அம்பன் புயலுக்கு பின் இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் இனி வெப்பநிலை குறைய தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் தீவுப்பகுதிகளில் உருவான அம்பன் புயல் வங்கதேச பகுதியில் கரையை கடந்தது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் ஈரப்பதமற்ற நிலை உருவாகி வெயில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மே 28 முதல் வெப்பமண்டல புயல் உருவாவதால் வட மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இந்த புயலால் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் குளிர்கால மழையை தருகிறது. இதனால் இந்தியாவில் வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களில் 3-4 டிகிரி செல்சியஸ் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.