வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (08:23 IST)

இந்தியாவிலும் மனிதர்கள் மேல் தடுப்பூசி சோதனை! – இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

இந்தியாவில் கொரோனா இரண்டு நிறுவனங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள நிலையில் அவற்றை மனிதர்கள் மேல் சோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அவ்வாறாக இந்தியாவில் பல நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில் இரண்டு மருந்துகள் விலங்குகள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக்கின் கேவெக்சின் தடுப்பூசியும், ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியும் விலங்குகளிடையே வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நிலையில், அவற்றை மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் ஜைடஸ் கெடிலா நிறுவனம் தனது தடுப்பூசியை ஆயிரம் பேரிடம் பரிசோதித்து பார்க்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தடுப்பூசியின் முதற்கட்ட பாதுகாப்பு சோதனை 84 நாட்களிலும், இரண்டாவது கட்ட பாதுகாப்பு, செயல்திறன் சோதனை அடுத்த 84 நாட்களிலும் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.