1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (08:21 IST)

மற்ற நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் உள்ளது! – மத்திய அமைச்சர் கருத்து!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா மற்ற நாடுகளை விட நல்ல நிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி போன்ற பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் குறைவாக இருந்த பாதிப்புகள் தற்போது நாளொன்றுக்கு 10 ஆயிரம் வீதம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் “பொதுமக்கள் இன்னும் அதிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். முகக்கவசங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அதில் மன நிறைவு அடைவதற்கு இடமில்லை” என தெரிவித்துள்ளார்.