செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (11:50 IST)

இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றிய கனடா.. பதிலடி கொடுத்த இந்தியா..!

கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை அந்நாட்டு அரசு வெளியேற்றிய நிலையில் கனடா தூதரக அதிகாரியை இந்தியாவிலிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக  கனடா தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது 
 
காலிஸ்தான் நிஜ்ஜார் மரணத்தில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ குற்றச்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு வெளியான சில மணி நேரங்களில் இந்தியாவின் தூதரக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டார் 
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கனடா தூதர் 5 நாட்களில் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran