ஒரு டோஸ் போட்டால் போதும்; ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி!
கொரோனாவை கட்டுப்படுத்த ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பைசர், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு டோஸ் மட்டுமே செலுத்தப்படும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்க வேண்டும் என விண்ணப்பிக்கப்பட்டது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு 29 நாடுகளில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய நிலையில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.