திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (17:14 IST)

ஓய்வுக்கு பின்னரும் ஊதியம் வழங்கப்பட்டதா? செபி தலைவர் மாதபி புரி குறித்து ஐசிஐசிஐ வங்கி விளக்கம்..!

தற்போது செபி தலைவராக இருக்கும் மாதபி புரி புச் என்பவர் ஐசிஐசி வங்கியில் பணிபுரிந்த நிலையில் அவர் அங்கு ஓய்வு பெற்ற பின்னரும் விதிமுறைகளை மீறி ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில் ஐசிஐசிஐ வங்கி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

செபி தலைவர் மாதவி புச் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்த நிலையில் அவர் 16.8 கோடி ரூபாய் ஓய்வுக்கு பின்னரும் ஊதியம் பெற்றதாகவும் இது செபி ஊதியத்தை விட 5 மடங்கு என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

 ஆனால் இதற்கு ஐசிஐசிஐ வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. ஓய்வுக்கு பிறகு பணி காலத்திற்கு உரிய பலன்களை மட்டுமே மாதம்பி பெற்றுள்ளார் என்றும் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ஓய்வுக்கு பின்னரும் ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் கூறியிருப்பதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மாதபி வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதிய பலன்களை மட்டுமே பெற்றுள்ளார் என்றும் ஊதியம் அல்லது வேறு எந்த பண பலன்களையும் ஐசிஐசிஐ வங்கி அளிக்கவில்லை என்றும் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Siva