1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (21:14 IST)

நள்ளிரவு 12 மணி வரை அவையை நடத்த தயார்; கர்நாடக சபாநாயகர் அதிரடி

கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் குமாரசாமி இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக உத்தரவிட்டிருக்கும் நிலையில் தேவைப்பட்டால் நள்ளிரவு 12 மணி வரை அவையை நடத்த தயார் என்று அறிவித்துள்ளார்.
 
கர்நாடக சட்டப்பேரை அமளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் மீண்டும் கூடியது. இன்று நள்ளிரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்திய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
எனவே இருதரப்பு எம்.எல்.ஏக்களும் மீண்டும் அமளியில் ஈடுப்பட்டிருப்பதால் அதிருப்தி அடைந்த சபாநாயகர், 'உங்களுக்கு வாக்களித்த 6 கோடி மக்களின் மீது உங்களுக்கு பயம் இருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று கூறிய சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்கும் என்றால் நான் நள்ளிரவு 12 மணி வரை அவையை நடத்த தயார் என்றும் அறிவித்தார்.
 
எனவே இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? அல்லது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது தெரிந்துவிடும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.