1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (15:31 IST)

ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரன் : கொலை செய்து செல்பி எடுத்த வாலிபர்

தனது மனைவியை ஆபசமாக வர்ணித்த நபரை கொலை செய்து மனைவிக்கு செல்பி அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
அவுரங்காபாத் மாநிலத்தில் வசிப்பவர் மோதிக்(23). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மோதிக் சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.
 
மோகித்தின் சகோதரை வீட்டில் பிரபாகர் என்ற வாலிபர் வேலை செய்து வருகிறார். அவருடன் மோகித்திற்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே அவர்கள் இருவரும் அவ்வப்போது ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒருவரும் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது, மோகித்தின் மனைவியை பிரபாகர் ஆபாசமாக வர்ணித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மோகித், அங்கிருந்த கல்லை எடுத்து பிரபாகரை பலமாக தாக்கி கொலை செய்தார். அதன்பின் அவரது உடலுடன் செல்பி எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 
அதன்பின் பிரபகாரனின் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி அருகிலிருந்த காட்டுப்பகுதியில் வீசிவிட்டார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் மோகித் குற்றவாளி என்பதை கண்டுபிடித்து விட்டனர். 
 
எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.