புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (13:07 IST)

தொடர்ச்சியாக ஆபாச படம் பார்த்த நபர் எடுத்த விபரீத முடிவு!

porn
தொடர்ச்சியாக ஆபாச படம் பார்த்த ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் பாஷா என்பவருக்கு மூபினா என்ற மனைவியும் ஐந்து குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜாகீர் பாஷா அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து வந்தது தெரிகிறது .
 
இந்த நிலையில் ஒரு ஆபாச படத்தில் தனது மனைவியை போல் இருக்கும் ஒருவரை பார்த்தவுடன் ஜாகீர் பாஷா அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் தன் மனைவியை அவ்வப்போது சந்தேகம் கொண்டு தாக்கியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜாகீர் பாஷா மற்றும் மூபினா  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரத்தில் கத்தியை எடுத்து மனைவியை மூபினாவை ஜாகீர் பாஷா குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ஜாகீர் பாஷாவை தேடி வருகின்றனர்.