1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2016 (15:01 IST)

சூதாட்டத்தில் மனைவி மீது பெட்: நண்பனுடன் உறவுக்கொள்ள வற்புறுத்திய கணவன்

ஜெய்ப்பூர் மாநிலத்தில் சூதாட்டத்தில் மனைவி மீது பெட் கட்டி தோற்றதால், மனைவியை நண்பனுடன் உறவுக்கொள்ள வற்புறுத்திய கணவன், மறுப்பு தெரிவித்த மனைவியை விவாகரத்து செய்தார்.


 

 
ஜெய்ப்பூர் மாநிலத்தில் முஸ்லீம் முறைப்படி மூன்று முறை தாலக் செய்து ஒரு தம்பதியினர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் விவாகரத்து பெறுவதற்கு காரணம், கணவன் சூதாட்டத்த்தில் மனைவி மீது பெட் கட்டி தோல்வி. மனைவியை நண்பனுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார். 
 
மனைவி மறுத்து வந்ததால் கணவன் ஆத்திரமடைந்து மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். கணவன் தன்னை ஆத்திரத்தில் விவாகரத்து செய்தாலும், அவருடன் மீண்டும் வாழ முடியும் என்று கூறினார்.
 
இதையடுத்து ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதியன்று கணவன் வெளியே செல்லலாம் என்று கூறி மனைவியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மயக்கம் அடைய செய்தார்.
 
மனைவி மயக்கம் தெளிந்து எழுந்தபோது நிர்வாணமாக இருத்துள்ளார். உடனே சத்தம் போட்டுள்ளார். மனைவியில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கணவன், மனைவியிடம் ‘நிக்கா ஹலாலா’ என்று கூறியுள்ளார்.
 
நிக்கா ஹலாலா என்றால் விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு சம்மதம் கூறும் விதமாகும். ஆனால் அந்த பெண் காவல்துறையினரிடம், கணவனின் உதவியால் அவரது நண்பன் தன்னை வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
 
ஆனால் அவர் அளித்த புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முஸ்லீம் முறைப்படி தம்பதியினர் இருவரும் மொபைல் போன் மூலம் குறுஞ்செய்தி வழியாக மூன்று முறை தலாக் என்று அனுப்பினால் விவாகரத்து என்பது குறிப்பிடத்தக்கது.