செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 14 ஜூன் 2017 (17:43 IST)

பாம்பு கடித்ததால் மனைவியை கடித்த கணவன்

பீகார் மாநிலத்தில் மனைவி மேல் உள்ள பாசத்தில் பாம்பு கடியால் உயிர் பிரியும் நேரத்தில் கணவன் மனைவியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகார் மாநிலம் பிர்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராய் என்பவருக்கு கடந்த சனிக்கிழமை இரவு தூக்கத்தில் பாம்பு கடித்துள்ளது. இதை அவர் மறுநாள் காலையில் தன் மனைவியிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு மனைவி மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். அப்போது சங்கர் தனது மனைவியிடம், நீயும் என்னுடன் வந்துவிடு என கூறியுள்ளார். அவரது மனைவியும் நானும் சாகிறேன் என்று கூற உடனே சங்கர் மனைவியின் கையில் கடித்துள்ளார்.
 
இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சங்கர் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவிக்கு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.