மனைவி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கணவர் கைது!
மனைவி தூக்கில் தொங்கிய போது அதை வீடியோ எடுத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியில் சோபிதா மற்றும் சஞ்சீவி திருமணம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சோபிதா மற்றும் சஞ்சீவி ஆகிய இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதை அடுத்து மன விரக்தி அடைந்த சோபிதா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
அப்போது அருகில் இருந்த அவரது கணவர் சஞ்சீவி மனைவியை தடுக்க முயற்சிக்காமல் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோவை சோபிதவின் தந்தை தற்செயலாக பார்த்த நிலையில் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Siva