அன்றாட உணவுக்கே வழியில்லாத, வேலை இல்லாத பாமரர்கள் பிச்சை எடுத்து தங்கள் பிழைப்பை ஓட்டுகின்றனர். ஆனால் பிச்சை எடுத்தே கோடீஸ்வரராக ஆன மும்பை பிச்சைக்காரரை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மும்பையின் மிகவும் பிஸியான ரயில் நிலையம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். உள்ளூர், வெளிமாநில ரயில்கள் வந்து போகும் இந்த முக்கிய சந்திப்பில் தினசரி 1 லட்சம் பயணிகள் வரை சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தின் வாசலில் கிழிந்த ஆடையுடன் கடந்த 40 வருடங்களாக பிச்சை எடுத்து வருபவர் பாரத் ஜெயின். தனது 14வது வயதில் வயிற்று பிழைப்பிற்காக ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்க அமர்ந்தவர் இப்போது 7.50 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதி.
அத்தனையும் பிச்சை எடுத்ததில் கிடைத்த வருமானம். பாரத் ஜெயின் பிச்சையிடுபவர்களிடம் கறார் காட்டுபவர் அல்ல. அவர்கள் 1 ரூபாய் போட்டாலும் பணிவாக பெற்றுக் கொள்பவர். தற்போது தினசரி ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பார்க்கும் பாரத் ஜெயின், மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லட்சங்களில் அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அவரது 2 பிள்ளைகளும் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கின்றனர். இதுதவிர மும்பையின் முக்கிய ஏரியாவில் 2 கடைகளை வாங்கி மாதம் ரூ.30 ஆயிரத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார் பாரத் ஜெயின். இதன்மூலம் உலகிலேயே கோடீஸ்வரராக உள்ள பிச்சைக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாரத் ஜெயின். இவரது சொத்து மதிப்பு 7.50 கோடி ரூபாய்
இதே மும்பையை சேர்ந்த சக பிச்சைக்கார கோடீஸ்வரர்களான சம்பாஜி காலேவின் சொத்து மதிப்பு 1.50 கோடி ஆகும். லட்சுமி தாஸ் என்ற பிச்சைக்காரர் ரூ.1 கோடிக்கு சொத்து வைத்துள்ளார்.
Edit by Prasanth.K