ஆங்கிலேயர்கள் கட்டாய மதமாற்றம் என்னும் கொடுமையை செய்தனர்: கவர்னர் ரவி
ஆங்கிலேயர்கள் கட்டாயம் மதமாற்றம் என்ற கொடுமையை செய்தனர் என்று கன்னியாகுமரியில் நடந்த விழா ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் அய்யா வழி ஆய்வு மையத்திற்கு தமிழக ஆளுநர் அடிக்கல் நாட்டிய பின் பேசியபோது, “அனைவரும் ஒன்று, அனைவரும் சமம்” என்று தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளை வழிபட வேண்டும் என்று சனாதன தர்மம் எப்போதும் கூறவில்லை. வேறு மொழி பேசலாம், வேறு உடை அணியலாம். ஆனால் நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதுதான் சனாதனம்.
ஆங்கிலேயர்கள் கட்டாயம் மதமாற்றம் என்னும் கொடுமையை செய்தனர். பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்துக்கள் மற்றும் இந்து தர்மம் குறித்து கண்டனம் தெரிவித்தனர்.
ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்ட சிலர் கோவிலில் நுழைய முடியாமல் இருந்த காலத்தில், மகாவிஷ்ணு வைகுண்டராக கடவுள் அவதாரம் செய்தார்.
சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதாரம் செய்வார் என்றும் தமிழக ஆளுநர் ரவி பேசினார்.
Edited by Siva