அயோத்திதான் ராமர் பிறப்பிடம் என்பது மக்கள் நம்பிக்கை: நீதிபதிகள் கருத்து!
இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள அயோத்தி வழக்கில் தற்போது தீர்ப்புகள் குறித்த விளக்கங்களை நீதிபதிகள் அளித்து வருகின்றனர்.
பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், அங்கு ஏற்கனவே வேறு ஒரு கட்டிடம் இருந்ததாகவும் தொல்லியல் துறை அளித்த ஆவணத்தை நீதிபதிகள் பரிசீலித்துள்ளனர். மேலும் அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என மொத்த இந்து மக்களும் நம்புவதாகவும், அந்த இடத்தைதான் இஸ்லாமியர்கள் பாபர் மசூதி என்று அழைப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த கருத்து சிறு சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் 5 நீதிபதிகளின் ஒருமித்த கருத்து இது என்பதால் முழு தீர்ப்பையும் வாசித்து முடித்த பிறகே தெளிவான முடிவுகள் தெரிய வரும் என கூறப்படுகிறது.