Daily Horoscope

கேரளாவில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா??

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 30 ஜூலை 2021 (09:08 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.
 
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் நாட்டின் தினசரி பாதிப்பில் 50% பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அங்கு பாதிப்பு எண்ணிக்கை தினமும் 10,000க்கும் மேல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரளாவில் 1.54 லட்சம் பேர் தொற்றால் பாதித்து தற்போது சிகிச்சை பெற்று  வருகின்றனர். இது, நாடு முழுவதும்  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 37.1 சதவீதமாகும். கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments