வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 4 அக்டோபர் 2014 (12:48 IST)

ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வேளை வந்து விட்டது: நரேந்திர மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். ஹரியானா மாநிலம் கர்ணல் பகுதியில் பேசிய அவர் ஹரியானாவின் வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
 
பின்னர் கூட்டத்தில் மோடி பேசுகையில், “ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையில் பாஜக ஆட்சி மலரச் செய்யுமாறு“ மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
 
“உலகம் முழுவமது இன்று இந்தியாவைப் பற்றிதான் பேசிக்கொண்டிருகிறது. உலக அரங்கில் இந்தியாவுக்கான மரியாதை தற்போது உயர்ந்துள்ளது.
 
ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வேளை வந்து விட்டது. பாஜக ஆட்சி மலர வாக்களியுங்கள். காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
 
இந்தத் தேர்தல் ஹரியானாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் எனவே சிந்தித்து வாக்களியுங்கள்.“ என்று நரேந்ரிர மோடி கூறினார்.